
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா
ஆண்டியப்பனூர் பாலாஜி மஹாலில் இன்று காலை 9 மணியளவில் இருணாபட்டு ஊராட்சிக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் இருணாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
உடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி , ஸ்வேதா திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமலை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.