
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025-னை தொடங்கி வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் பலர் உள்ளனர்.