
காவல்துறை சமரச பேச்சு வார்த்தையில் ஒத்திவைப்பு கடலூர் பிப்ரவரி 27 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் ரெட்டியார் தெருவில் வசிக்கும் சுகுமார் தாஸ் மகன் ஹரிஹரன் என்பவரின் திருமண மண்டபம் கட்டும் பணியில் சுமார் 130 நாட்களாக வேலை செய்துள்ள தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமம் புபேஸ் குப்தா உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு வேலை செய்துள்ள சம்பள பாக்கி ரூபாய் 12 லட்சத்தை வேலை ஆட்களிடம் கொடுக்க பலமுறை கேட்டும் கொடுக்க மறுத்ததை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க காட்டுமன்னார்கோவில் காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறையை கண்டித்தும்
மேலும் ஒரு கட்டத்தில் தொழிலாளர்களை வீட்டினுள் வைத்து பூட்டி சிறைப்பிடித்து கொடுமை படுத்தி கூலிப்படையை வைத்து கொடுமை நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
அதனை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சீரணி அரங்கத்தில் அனைவரும் கூட்டம் கூட்டமாக கூடிய நிலையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் பேச்சுவார்த்தை செய்து உடனடியாகக் போராட்டம் மாற்று தேதி குறிப்பிடாமல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இது நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மாநில கட்டுப்பாட்டு குழு மணிவாசகம் மாவட்ட நிர்வாகக் குழு ஏ.கே.சுப்பிரமணியன் வட்ட செயலாளர் முருகவேல் வட்ட குழு ஆனந்தராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட தோழர் புபேஸ் குப்தா உள்ளிட்ட கடலூர் மாவட்டம் தஞ்சை மாவட்டம் அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் குறிஞ்சிப்பாடி புவனகிரி கடலூர் மங்களூர் சிதம்பரம் நல்லூர் அண்ணா கிராமம் விருத்தாசலம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.