இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா மாகாணத்துக்கான செனட் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மைக்கேல் ஸ்டீல், ஜனநாயகக் கட்சி சார்பில் டெரெக் டிரான் போட்டியிட்டனர். தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்படாததால் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டதாகவும், கலிபோர்னியாவில் இன்னும் எண்ணிக்கொண்டே இருப்பதாகவும் கிண்டலடித்துள்ளார்.