இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் குறைந்தது

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் குறைந்தது
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $656.58 பில்லியனாக குறைந்தது

செய்தி முன்னோட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $1.31 பில்லியன் குறைந்து $656.58 பில்லியனாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது முந்தைய வாரத்தில் வரலாறு காணாத $17.76 பில்லியன் சரிவைத் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் $3.043 பில்லியன் குறைந்து $566.79 பில்லியனாக உள்ளது.

இதற்கிடையில், தங்கம் கையிருப்பு 1.83 பில்லியன் டாலர் அதிகரித்து 67.57 பில்லியன் டாலராக இருந்தது, இது சற்று நிவாரணம் அளித்துள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) $79 மில்லியன் குறைந்துள்ளது. மேலும் இந்தியாவின் ஐஎம்எப் இருப்பு நிலை $15 மில்லியன் குறைந்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவு

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நிதியாண்டு 2024 இன் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 5.4% ஆக குறைந்தது.

இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான 8.1% வளர்ச்சியில் இருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.

முதன்மையாக உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்திறன் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

சரிவு இருந்தபோதிலும், அதே காலகட்டத்தில் சீனாவின் 4.6% ஜிடிபி வளர்ச்சியை விஞ்சி, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

ஜிடிபி மந்தநிலையானது உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியில் பொருளாதார மீட்சி பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *