
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை , பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள மணல்மேடு,நீடூர் தரங்கம்பாடி, பூம்புகார் , செம்பனார்கோவில், மங்கநல்லூர் , குத்தாலம் , வைத்தீஸ்வரன் கோவில் , சீர்காழி , கொள்ளிடம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மிதமான மழை தற்போது வரை விட்டுவிட்டு இடி மின்னலுடன் பெய்து வருகிறது.
தொடர்ந்து 8.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறை 10.00 மில்லி மீட்டர்,மணல்மேடு4.00 மில்லி மீட்டர்,சீர்காழி14.80 மில்லி மீட்டர்,கொள்ளிடம்3.00 மில்லி மீட்டர்,செம்பனார்கோயில் 23.80 மில்லி மீட்டர் மலையும் , தரங்கம்பாடியில் 22.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் இருள் சூழ்ந்து காணப்பட்டு இடைவிடாது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கி கிடக்கின்றனர். தொடர்ந்து கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ள நிலையில்
மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

