
ஆலங்குளம்,ஜூலை.4 – தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டபரப்புரைபடி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன் றிய நிர்வாகிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
வலைதள செயலி மூலம் புதிய உறுப்பி னர் சேர்ப்பது குறித்த பயிற்சி நடபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலடி எழில்வாணன், ஒன்றிய செயலாளர்கள் செல் லத்துரை, சமுத்திரபாண்டி, சிவகுமார், பொன்செல்வன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் வக்கீல் நெல்சன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் பங்கேற்று இத்திட்டத்தின் மூலம் புதிய உறுப்பினர்கள்
சேர்ப்பது குறித்து கட்சியினரி டையே பேசினார்.ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஐடி விங் பொறுப்பாளர் ராமேஸ்வரம் நரேஷ் வலைதள செயலியை கட்சியினர் உபயோகிப்பது குறித்து திரையிட்டு காட்டி விளக்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சேக்முக மது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சந்தான சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

