
ஆலங்குளத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம். 50 கர்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில், ஆலங்குளத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துசெல்வி தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் பரமேஷ்வரி வரவேற்றார்.
இதையொட்டி கர்பிணிகள் 50 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், பெண் தூய்மைப் பணியாளர்கள், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த 50 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
பள்ளி மாணவிகளின் பரதம், சிலம்பாடம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், மகளிரணிநிர்வாகிகள் கலா, சீதா, முருகேஷ்வரி, சாரதா, முத்துமீனாட்சி, முத்துலெட்சுமி வடிவேல், முத்துலெட்சுமி ராஜா, முத்துலெட்சுமி, ரஞ்சனி, அழகு சுந்தரி, ஒன்றியச் செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் சாரதி, துணைச் செயலாளர் பசுமதி சுடலைமுத்து, கணேசன், பேரூர் செயலாளர் பொன் ரேவந்த், பொருளாளர் ராஜதுரை, பேரூர் நிர்வாகிகள் ராமசந்திரன், தீலீப்குமார் வசந்த், பத்மநாதன், ராமலெட்சுமி மற்றும் கட்சி நிர்வாகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

