ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா

கேரளாவில் உலக புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இவ்வருட பொங்கல் திருவிழா 2025 மார்ச் மாதம் 5-ம் தேதி புதன் கிழமை ஆரம்பமாகிறது.

அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு காப்புகெட்டி, குடியிறுத்தி திருவிழா ஆரம்பமாகிறது. லட்சக்கணக்கான பெண்பக்தர்கள் பங்குபெறும் உலக பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா மார்ச் 13-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும்.

சுத்த புண்ணிய சடங்குகளுக்கு பின் காலை 10.15 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்யம் நடைபெறும்.

அன்று இரவு அம்மன் நகர் ஊர்வலம் முடிந்த பின் மார்ச் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 1.00 மணிக்கு நடக்கும் குருதி தர்பணத்துடன் திருவிழா நிறைவு பெறும் என நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் ஆலய நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *