
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் 70 வயதான முதியவர் அடிவயிற்று குருதி குழாயில் வீக்கம் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக மீனாட்சி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எந்த நேரத்திலும் வெடித்து உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தமனி அழற்சி அடிவயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது,மேலும் அடிவயிற்றில் பிரதான ரத்த நாளத்தில் ஆபத்தான மிகவும் விரிவாக்கமும் கடும் ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன,
மேலும் பெருந்தமணியில் கண்டறியப்பட்ட குருதி நாள அழற்சி 7.2 செ.மீஅளவுடன் பெரிதாக இருந்தது சில நிமிடங்களுக்குள் உயிரெழுப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் பாதிப்பு இருந்தது,
தொடர்ந்து கார்டு துறையின் தலைவர் சிவக்குமார் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரபு குமரப்பன், இதய மயக்கம் மருந்தியல் துறையின் தலைவர் மருத்துவர் குமார் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் சருமத்தின் வழியாக EVAR என அறியப்படும் நோயாளிக்கு காயத்தை குறைக்கும் வகையில் புளோரோஸ்காபிக் இமேஜ் வழிகாட்டலின் கீழ் நோயாளிகள் கிராயின் பகுதியில் சிறிய துளையிட்டு ஸ்டெண்ட்டை பொருத்தி அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டனர்.
இந்த புதுமையான அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நோயாளிக்கு ஏற்படும் அசவுகரியத்தை பெரிதும் குறைப்பதற்கு உதவி மீண்டும் இயல்புநிளைக்கு திரும்புவதை துரிமாக்கி இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் முதியவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் மூன்று மாத கண்காணிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பது இந்த சிகிச்சையை பயனளிக்கும் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது நோயாளி ஆரோக்கியத்துடன் நலமுடனும் உள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கார்டியாக் சைன்ஸ் துறையின் முதுநிலை நிபுணர்கள் மருத்துவர்கள் கணேசன் சம்பத்குமார் செல்வமணி ஜெயபாண்டியன் மற்றும் இணை ஆலோசகர்கள் தாமஸ் சேவியர் திலீப் உடன் இருந்தனர்.

