ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
இந்த பாதிப்புகள் ஆண்ட்ராய்டு மென்பொருள் பதிப்புகள் 12, 12L, 13, 14, மற்றும் 15 ஆகியவற்றைப் பாதிக்கின்றன

செய்தி முன்னோட்டம்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), ஆண்ட்ராய்டில் உள்ள பல குறைபாடுகளை கண்டறிந்து, பயனர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால் எளிதில் ஹேக் செய்யக்கூடிய அபாயம் இருப்பதாகவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைபாடுகள் பயனர்களின் மொபைலில் அல்லது டேப்பில் அங்கீகரிக்கப்படாத தரவு அணுகல், கணினி உறுதியற்ற தன்மை மற்றும் சாத்தியமான தரவு மீறல்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.

மென்பொருள்

பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் Android மென்பொருள் மற்றும் சாத்தியமான பாதிப்புகள்

கண்டறியப்பட்ட இந்த பாதிப்புகள் ஆண்ட்ராய்டு மென்பொருள் பதிப்புகள் 12, 12L, 13, 14, மற்றும் 15 ஆகியவற்றைப் பாதிக்கின்றன.

இதனால் பலதரப்பட்ட சாதனங்கள் எளிதில் பாதிக்கப்படும்- ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பதிப்புகளில் இயங்கும் பிற உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் அடங்கும்.

கண்டறியப்பட்ட இந்த குறைபாடுகள், அண்ட்ராய்டின் கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் புதுப்பிப்புகள் மற்றும் கர்னல் போன்ற பல கூறுகளிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்றால் பயனர்களின் சாதனத்தின் மீது அங்கீகரிக்கப்படாத கட்டுப்பாட்டை அனுமதிக்கும் அபாயம் உள்ளது.

இதன் மூலம் தன்னிச்சையான குறியீட்டை இயக்கவும், தீங்கிழைக்கும் செயல்களுக்கு வழிவகுக்கவும் முடியும், உங்கள் சாதனத்தை செயலிழக்கச் செய்யவும் முடியும்.

நடவடிக்கைகள்

உங்கள் சாதனத்தை பாதுகாக்க CERT-In பரிந்துரைக்கும் நடவடிக்கைகள்

CERT-In ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் OEMகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. பயனர்களை புதுப்பிப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.

அபாயங்களைக் குறைப்பதற்கும் சாத்தியமான சுரண்டலுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கும் இந்தப் புதுப்பிப்புகள் அவசியம்.

ஆண்ட்ராய்டு, ஒரு திறந்த மூல தளமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான சாதனங்களை இயக்குகிறது.

அதன் நெகிழ்வுத்தன்மையும், செயல்பாடும் அதை ஒரு பிரபலமான ஹேக்கிங் குறியாக மாற்றும் போது, ​​இது போன்ற பாதிப்புகள் வழக்கமான மென்பொருள் புதுப்பிப்புகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *