
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா
ஆகஸ்ட்-26:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரக்கன்று நடும் விழா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை தலைவர் முனைவர் நீ.ஜான்சன் ஒருங்கிணைத்தார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க.ரவி தலைமை தாங்கி மாணவர்களோடு இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்ததோடு மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்வினை சிறப்பித்தனர்.

