அரிசி வியாபாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

அரிசி வியாபாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரியின் வீட்டில் இருந்த 300 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வளபட்டணம் பகுதியை சேர்ந்த அஷ்ரப், அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்ற நிலையில் அதனை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர்.

பின்னர் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 300 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து வீடு திரும்பிய அஷ்ரப் நகை மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் புகாரளித்த நிலையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *