அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஏமாற்றிய டாக்டர் மகன் மீது எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஏமாற்றிய டாக்டர் மகன் மீது எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி விஎஸ்வி. நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மனைவி பிரேமாவின் இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் ஜெயகாந்தன் என்பவருக்கும் நண்பர் முறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நாகராஜ் முன்னாள் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் இதனை பயன்படுத்தி ஜெகநாதன் தனது தந்தைக்கு அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளது.

எனவே அரசு வேலை என்னால் வாங்கி தர முடியும் என பிரேமாவிடம் கூறிவந்துள்ளார் இதனை நம்பிய பிரேமா எனக்கு கருவூலத்தில் வேலை வேண்டுமென கூறியதன் காரணமாக அதற்கு 8 லட்சம் ஆகும் என ஜெகநாதன் கூறியுள்ளார் இதன் காரணமாக முதலில் 5 லட்சம் ரூபாயை பிரேமா கொடுத்துள்ளார்

அதுமட்டுமின்றி பிரேமாவின் வீட்டை சுற்றியுள்ள குமரேசன், சரஸ்வதி, ரியாஸ் அஹமத், ஆனந்தன், ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு இடமும் 8 லட்ச ரூபாய் கேட்டுள்ளார் பின்பு ஒவ்வொருவரும் மூன்று லட்சம் கொடுத்து உள்ளார் ஐந்து பேர் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை ஜெகநாதன் வாங்கி உள்ளார்.

ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி தராமலும் மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும்‌ ஜெகநாதன் ஆளைக்களித்து வந்ததால் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணத்தை மீட்டு தரவும் அதேபோல ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *