
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகமண்டலத்தில் SC/ST தொழிலாளர்களுக்கு தொடரும் வன்கொடுமை உடனடியாக தீர்வு வேண்டுமென SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதகமண்டலத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து உதகமண்டலத்தில் SC /ST தொழிலாளர்கள் வன்கொடுமையின் கீழ் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இதனால் வரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனவும் மேலும் தொடர்ந்து 40 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று கட்டாயமாக நிர்ணயிக்கப்படுவதோடு. மற்ற சக பணியாளர்கள் யாரும் செல்லாமல் இருக்கும் பேருந்து வழி தடத்திற்கு இவர்களை கட்டாயபடுத்தி அனுப்புவது மட்டுமின்றி பொய்யான குற்றச்சாட்டு வழங்கி விசாரணை இல்லாமல் சம்பள இழப்பீடு ஏற்படுத்துவது. விடுப்பு முறையாக கொடுத்தும் விடுப்பு வழங்க மறுப்பு தெரிவிப்பது மற்றும் பணிக்கு செல்லும் போது குற்றச்சாட்டு குறிப்பினை வழங்குவதும், இதனால் நிம்மதியாக பணி செய்ய முடியாத சூழ்நிலையில் விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகும் எனவும் SC/ST தொழிலாளர்களுக்கு கட்டாய பணி மாறுதல் செய்து ஓட்டுனர் நடத்துநர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிம்மதி இல்லாமல் செய்து வருகின்றனர் என புகார் தெரிவித்துள்ளார்கள். ஆகவே மேற்கண்ட அதிகாரிகள் மீது உரிய வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் SC/ST பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளித்தார்கள். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.