
திருப்பத்தூர் : ஜூலை – 8
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை எண் 297யை ரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை எண் 420யை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முரளிவாணன் தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் வரவேற்பு உரையாற்றினார்.
மேலும்அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ஜிஎஸ்டி விதித்ததை திரும்ப பெற வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் அசோக்குமார், கோட்ட தலைவர்கள் பனிமலர், செந்தில், மாவட்ட துணை தலைவர் பூபதி, வட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்டத் தலைவர் அருள்மொழிவர்மன், மாவட்ட செயலாளர் திருமால், மாநிலத் துணைத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட பிரச்சார செயலாளர் அறவேந்தன், மாநில தணிகையாளர் கதிரவன், கோட்டை செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

