அனுமதி இன்றி மண்ணள்ளிய ஜேசிபி லாரிகள் பறிமுதல் நெமிலி போலீசார் அதிரடி:-

அனுமதி இன்றி மண்ணள்ளிய ஜேசிபி லாரிகள் பறிமுதல் நெமிலி போலீசார் அதிரடி:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் பகுதிக்கு உட்பட்ட வடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் வயது 61 விவசாயி.இவர் தனக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள நிலத்தில் அரசு அனுமதியின்றி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மண் எடுத்து லாரியில் ஏற்றியுள்ளார்.

இதுகுறித்து நெமிலி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் நெமிலி காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் லோகேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை கண்டவுடன் அங்கு இருந்த ஜேசிபி லாரி டிரைவர்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரும் தப்பிச்சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மண் எடுக்க பயன்படுத்திய ஜேசிபி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் நில உரிமையாளர் தனசேகரன்(61),ஜேசிபி டிரைவர் அசோக் (26),லாரி டிரைவர் வினோத்(27) உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *