
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 24வது வார்டு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் நாதகிரி முருகன் – பாவனா ஆகியோர்களின் திருமண விழாவில் அதிமுக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி நேரில் சென்று வாழ்த்தினார்.
அப்போது நகரச் செயலாளர் ஆறுமுகம், பேரவை செயலாளர் சாகுல் ஹமீது (எ) சௌந்தர், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் கந்தன், நிர்வாகி சங்கரநாராயணன் என்ற நானா மற்றும் மணமகன் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

